×

மணப்பாறை அருகே வாகனங்களில் அடிபட்டு மயில்கள் இறக்கும் அவலம் வனத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மணப்பாறை, மே 15:  மணப்பாறை அருகே வாகனங்களில் அடிபட்டு மயில்கள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு வனத்துறையினருக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணப்பாறையை அடுத்த குளித்தலை ேராடு, மாணிக்கம் பிள்ளை சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பறவையான மயில்கள் அதிகளவில் வாழ்ந்து வருகிறது. இப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக மயில்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் வனப்பகுதியை விட்டு குடியிருப்பு பகுதிகளை தேடி வருகின்றன. இதுபோல கடந்த 11ம்தேதி காலை மணப்பாறை அடுத்த மாணிக்கப்பிள்ளை சத்திரம் அருகே திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண் மயில் உயிரிழந்தது.  இது போல, நேற்றும் குளித்தலை ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் மயில் ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை வனத்துறையினர் மயிலை எடுத்துச் சென்று உடற்கூறாய்வு செய்து புதைத்தனர். அடுத்தடுத்து மயில்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பது இப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே,  மயில்கள் உணவு மற்றும் இரை தேடி வரும்போது வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : mantle ,forests ,
× RELATED வார விடுமுறை, பள்ளி விடுமுறையை ஒட்டி...